Tuesday 7 August 2012

ஞானி

ஒரு துளி விழுந்து  இயற்கையின் விங்கானத்தால் விளைந்தத வினை இது
எவனதோ வினை பயன்..
வெளிச்சமும் இருட்டும் தோற்றும் ஜெயித்தும் ஓடிக்கொண்டிருக்க
எனக்கும் முளைத்தது கால்கள் ஓட


வரவில்லை வாழ்க்கை மலர் தொடுத்த மாலையாய்
மலர் தேட முள்ளே சிக்கின
விரல் நீட்டி வலி காட்ட யாரும் இல்லை..
வரவும் இல்லை வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறையோடு..

நெருப்பை தொட்டும் நீரை விட்டும் அறிந்தேன் வாழ்க்கையை..
ஆயிரம் மதங்கள், பல்லாயிரம் வழக்கங்கள்,
புதிராயிருந்தது எல்லாம்..
ஒரு இறைவன் உண்டேன்றன்.. ஒருவன் எங்கென்றான்.. இன்னொருவன் தெரியாதென்றான்..

நடந்தேன் பாதை தெரியமால்.. ஒருவன் இது தான் வழி என்றான்..
நடந்தேன் சிறிது தூரம்.. இது அல்ல வழி என்றான் இன்னொருவன்..
விளங்கவில்லை எதுவும்..
சிரித்தேன்.. அழுதேன்.. புலம்பினேன்..பித்தனாயிப்போனேன்
ஞானி என்றான் என்னிடம் கேட்காமலே..

Friday 3 August 2012

விவசாயி

கார் மேகம் பொய்த்ததனால்
பொட்டல் காடுகளும் வளர்ந்ததிங்கே
இங்கு தேர் ஒட்டி தேர் ஒட்டி திருவிழாவும் கொண்டாட
ஏர் ஓட்டும் உழவநெல்லாம்
ஓர் நாள் ஓட்ட படும் பாடு கண்டீரோ

தார் ரோட்டில் காசு பண்ணி
கார் ஓட்டும் மந்திருக்கு
கடிதம் எழுதி கலைத்திட்டனர் உழைத்தவரே
ஏறு ஏறு என்று ஏற்றி விட்ட உழைப்பாளியை
ஏறி நின்ற மந்திரியும் எட்டி கூட பாக்கவில்லை

நார் நாராய் கிழிந்த பின்னும்
நாய்கள் போல் அலைந்த பின்னும்
சோறும் கிடைக்கவில்லை சோகம் தின்று கொளுக்கிறதே
சேரும் செகதியும் இத்தேசத்தில் இல்லையென்றால்
வாயும் வயுரும் உனக்கிருந்தும் பயனேதும் இல்லையப்பா
பேரும் புகழும் பெற்று பல பேர் பிழைத்தாலும்
ஏழை உழவர்க்கு வழியேதும் இல்லையப்பா

சாறு வடிந்த கரும்பாய் சக்கையாய் கிடக்கும்
ஏழை மக்கள் போர் தொடுக்க முன்வந்து
பொங்கி எழுந்து நின்றாலே
பேர் ஆனந்தம் பெற்று பாரத அண்ணை
பெருமையுடன் நடப்பாளே !!!

Thursday 2 August 2012

புலம்பல்!

நட்புக்காய் வாழும் இதயம்
பிரிவுகளே வந்து தாக்கும்
பூத்து மனம் பரப்பும் போதா வேட்டையாடபடுவது
இனி இந்த நந்தவனம் பூக்குமா ?

நெஞ்சின் ஈரம் காய்ந்து போனது
துயரை சொல்ல வார்த்தையில்லா நிலை
சோக மூட்டையை பொதி சுமக்கும் கழுதையாய்
இன்று நான்....

ஏ நிலவே ! என் சிந்தனை பெட்டகமே
இனி நீ காயதே  ஒய்ந்து போ
என் துயரங்கல் உன்னையும் தவிக்க வைக்கும்
ஒளியை விட்டு ஒழியட்டும் !

ஏ தென்னையே ! நானும் உன் சொந்தமாகிவிட்டேன்
உன் போலவே தனித்து நிற்கிறேன்
என் கற்பனை குதிரைகள் இன்று காலொடிந்து நிற்கிறதே
இன்று என்னிடம் உயிரில்லை,  என் எழுதிக்களிடம்..

என் பேனா மையை துயரத்தில் நிரப்பி
 பிரிவுக்காகிதம் எழுதுகிறேன்
என் பேனா முள் கூட ஒடிந்த போனது!
என் கையெழுத்து கூட கசங்கிப்போனது!

இக்காகிதங்கல்கூட சோகத்தை அப்பிக்கொண்டன !
என் கனவுகள் கூட கண்ணீர் சிந்துகின்றன
இனி என் நாட்கள் அர்த்தமாகுமா?
என் கிறுக்கல்களிலிருந்து நான் அன்னியப்படுகிறேன்

என் சிந்தனைகள் சிறகொடிந்து நிற்குதே !
அப்புன்னகேயே இப்பிரிவால் புண்ணாகிப்போனது
நாட்கள் எண்ணப்படுகின்றன
என் வானில் இனி தேய்பிறை தானோ?
இனி இந்த வெண்ணிலா முகம் காட்டுமோ ?

என் கண்களில் பிரசவம் சம்பவிக்குமோ என்றொரு ஐயம்
பிரியமானவர்களே பிரியதானோ! மனம்தேற்றிகொண்டேன்
நிஜங்கள் பிரிந்தாலும் நிழல்கள் என்னோடுதான்..
சமாதனம் அடைவதற்காய்...
தூங்கிபோவேன் கனவில்லாமல் இனி..

Wednesday 1 August 2012

இறுதி மூச்சு..

இதோ இன்னும் சில நிமிடங்களில்...
இறுதி மூச்சை இழுத்து கொண்டு...
தான் வாழ்ந்த கலங்களின் எண்ணிக்கை தெரியா அறியாமை
சாதனைகள் செய்யவில்லை என வேதனையில் பிரகாசிக்கும் முகம்

உடல் கருது.. உள்ளம் கருது..எலும்புகளின் அணிவகுப்பாக
உழைப்பை மட்டுமே கண்ட தேகம்
தசை தளர்ந்து போய்.. அவர் மனது போலவே
நினைவுகள் தொலைந்து போய்
காற்றோடு உறவாடும் தேகம்

மனித சந்தடி பிடிக்காமல் போய்
உறவு சங்கிலியை அறுத்தெறியும் அவசரம்
புதிய உறவுகளை தேடிச்செல்லும் துடிப்பு
எத்தனை எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றங்களாய்

தொலைத்து  விட்ட நிம்மதியை தேடி தேடி எங்கோ பயணம்
விழிகள் கட்டப்பட்டு வலி தெரியா பயணம்
மீள முடியா இடத்திற்கு மீளும் பொருட்டு பயணம்
என் மீது அன்பு வைத்த ஜீவன் இன்று அன்புக்காக
அமைதிக்காக நெடுந்தூரம் பயணம்
முடிவில்லா பயணம் முடியுமா இந்த கல்லறையில்

பற்கள் பிரிவுகாகிதம் எழுதி பலநாட்கள் ஓடிப்போனது
ஓடி ஓடி ஒய்ந்து போய் அமைதியாய் உறங்கும் நேரம்
இத்தனை கால வாழ்க்கைக்கு நியாய தீர்ப்பு வழங்கும் நேரம்
கல்லறை சுவற்றில் ஒரு பிரிவுகாகிதம்.. வேண்டுகோளோடு
நீ எனக்கு நண்பனாய் வர வேண்டுமென்று....

Monday 30 July 2012

ஆற்றங்கரையோர மரங்கள்

முத்தமிட முதுகு குனிந்ததால்
மூச்சு பிடித்ததோ....
ஆற்றங்கரையோர மரங்கள் !!!

காதல் செய்வீரே!!!

நிறைந்து போய், வலிந்து போய்
கலந்து போய், காதல் கணித்து போனது
என் உடல் இறந்து போனாலும்
என் உடலை தின்னும் புழு பூச்சிகளே
காதல் செய்வீரே!!!